ஆப்நகரம்

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியான பிக்பாஸ் நடிகை!

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பானுஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார்.

Samayam Tamil 13 Apr 2019, 3:49 pm
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.
Samayam Tamil jai-banu


இந்தப் படம் குறித்து நடிகை பானுஸ்ரீ கூறுகையில், “இந்த படத்தில் நான் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம்.

நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன் என்றார்.

இந்தப் படத்திற்கு நடிகை பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்