ஆப்நகரம்

புள்ளைனா இது புள்ள: ரேஷ்மாவுக்கு காபி போட்டுக் கொடுக்கும் மகன்

பிக் பாஸ் 3 பிரபலம் ரேஷ்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

Samayam Tamil 6 May 2020, 2:11 pm
தமிழ், மலையாள படங்கள் மற்றும் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரேஷ்மா கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தன் கஷ்டங்களை எல்லாம் சொன்னார் ரேஷ்மா.
Samayam Tamil reshma


தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ரேஷ்மா பிற பிரபலங்களை போன்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பால்கனியில் ரேஷ்மா ஹாயாக அமர்ந்திருக்க அவருக்கு மகன் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார்.
View this post on Instagram Let me introduce my son #Rahul my ❤️ it's been a very tough last two days & he wanted to surprise me🙂 they wanted to see me smile 🙂#whenyouaremomanddad #myrock #mylife #thisshallpasstoo #smallthingsmatter #gestureofcare #raisedhimsinglehandedly #gentleman video courtesy: @dev_423 Kindly no hate comments. Thank you A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on May 5, 2020 at 5:52am PDT
பின்னணியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் ஓடுகிறது. அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் வியந்துள்ளனர்.

சிலரோ, மேடம் உங்களுக்கு சேலை நன்றாக இருக்கும். இது போன்ற குட்டி, குட்டி உடையில் வீடியோ வெளியிட வேண்டாம். உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறோம், அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரோ, நீங்கள் எந்த உடை அணிந்தாலும் உங்களை வெறுக்க மாட்டோம். நல்ல மகன் கிடைத்திருக்கிறான். பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. என்றும் இது போன்று சந்தோஷமாக இருக்க பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

விஷால் வீட்டு விசேஷத்தில் தான் ஜுவாலாவை முதன்முதலாக பார்த்தேன்: விஷ்ணு விஷால்

அடுத்த செய்தி

டிரெண்டிங்