ஆப்நகரம்

பிக்பாஸ் சக்தி, ஜூலி சந்திப்பு: ரீ எண்ட்ரி கொடுக்க ஆலோசனை?

பிக் பாஸ் வீட்டிலிந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்ட சக்தி மற்றும் ஜூலி சந்தித்து பேசியுள்ளனர்.

TNN 19 Aug 2017, 1:16 am
பிக் பாஸ் வீட்டிலிந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்ட சக்தி மற்றும் ஜூலி சந்தித்து பேசியுள்ளனர்.
Samayam Tamil bigg boss sakthi meets with julie
பிக்பாஸ் சக்தி, ஜூலி சந்திப்பு: ரீ எண்ட்ரி கொடுக்க ஆலோசனை?


பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜூலி இரண்டு வரங்களுக்கு முன்பும், கடந்த வாரம் சக்தியும் வெளியேற்றப்பட்டனர். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஜூலிக்கு இருந்த நற்பெயர், அதில் கலந்து கொண்டிருந்த போது அவர் செய்த சில விஷயங்களால் மாறிப்போய் உள்ளது. இருப்பினும் அவர் வெளியே செல்லும் போது கமல் கடைசியாக எனது மகளாக உன்னை அனுப்பி வைக்கிறேன் என சூசகமாக கூறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, அண்ணா, அண்ணா என சக்தியை சுற்றி வந்தார். இந்நிலையில் சக்தியும் ஜூலியை தொடர்ந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சக்தி, ஜூலியை நேரில் சென்று சந்தித்தாராம்.

ஜூலிக்கு ஒரு செய்தி சேனலில் வேலை கிடைத்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. அதே சமயம் தான் செய்தி வாசிக்க மாட்டேன், பிக் பாஸ் என்னை எந்த நேரத்திலும் கூப்பிடுவார். அப்படி கூப்பிட்டால் உடனே சென்று விடுவேன் என ஜூலி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்