ஆப்நகரம்

ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் ஷாரிக்!

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ஷாரிக் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Samayam Tamil 8 Dec 2018, 4:47 pm
தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மகன் ஷாரிக். இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் வீட்டில் நடிகை ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறிய சம்பவம் பெரிய சர்ச்சையானது.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90


இந்நிலையில் ஷாரிக் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்திற்கு ‘உக்ரம்’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் ஷாரிக் ஜோடியாக அர்ச்சனா நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு ‘அட்டு’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கவுள்ளார்.

‘அட்டு’ படத்தில் அர்ச்சனாவின் நடிப்பு திறமையை பார்த்து தான் தன் அடுத்த படத்திலும் இயக்குனர் ரத்தன் லிங்கா வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்