ஆப்நகரம்

படப்பிடிப்பை தொடங்கிய பிக்பாஸ் ஷாரிக் நடிக்கும் புதிய படம்!

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ஷாரிக், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘உக்ரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

Samayam Tamil 15 Dec 2018, 3:41 pm
பிரபல வில்லன் நடிகரான ரியாஸ்கானின் மகன் ஷாரிக். இவரது அம்மா உமா ரியாஸ்கான் இவரும் ஒரு நடிகை. இந்நிலையில் ரியாஸ்கானின் மகன் ஷாரிக் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார்.
Samayam Tamil shariqhaasan


இந்நிலையில் ஷாரிக் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் ‘உக்ரம்’. இந்தப் படத்தை ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தின லிங்கா இயக்குகிறார். இந்தப் படம் சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் திரில்லர் படமாக உருவாகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஷாரிக் ஜோடியாக ‘மிஸ் குளோபல்’ பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். படத்தில் வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார். கார் சேஸிங்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்