ஆப்நகரம்

கல்யாண நாளில் குழந்தையின் முகத்தை காண்பித்த சுஜா வருணி!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி தனது குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்.

Samayam Tamil 21 Nov 2019, 3:13 pm
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி தனது குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்.
Samayam Tamil bigg boss tamil fame actress suja varunee posted her son photo in social media
கல்யாண நாளில் குழந்தையின் முகத்தை காண்பித்த சுஜா வருணி!


சுஜா வருணி

பிளஸ் 2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சுஜா வருணி. அதன் பிறகு ஏராளமான தமிழ்படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் அவருக்கு போதுமான வரவேற்பு அளிக்கவில்லை.

பிக் பாஸ் சீசன் 1

இந்த நிலையில், தான் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். கடைசியாக இவரது நடிப்பில் வந்த படம் சத்ரு. இப்படத்தில் வில்லனுக்கு துணையான ஒரு கதாபாத்திரம்.

சுஜா வருணி திருமணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்துவிட்டது. எனினும், முதல் சீசன் தான் பலரும் புகழும் படி இருந்தது. இதில், ஆரவ் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். இந்த நிலையில், கடந்த ஆண்டு சுஜா வருணிக்கும், சிவாஜியின் பேரன் சிவக்குமாருக்கும் திருமணம் நடந்தது. சிங்கக்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சுஜா வருணி வளைகாப்பு

இந்த நிலையில், சுஜா வருணியும், சிவக்குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை. இதையடுத்து சுஜா வருணி சில மாதங்களுக்கு பிறகு கருவுற்று இருந்தார். அதன் பிறகு அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிவக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு சிம்ஹா பிறந்துவிட்டான் என்று குறிப்பிட்டிருந்தார்.

சுஜா வருணி மகன் ஆத்வைத்

இதையடுத்து, அண்மையில் முதல் திருமண நாளை கொண்டாடிய சிவக்குமார் – சுஜா தம்பதியினர் முதன் முதலாக தங்களது மகன் ஆத்வைத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் சிவக்குமார் மற்றும் சுஜா வருணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்