ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுஜா வருணிக்கு ஒவ்வொரு வாரத்திற்கு லட்சக் கணக்கில் சம்பளம்!?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியில் புதிதாக இணைந்துள்ள சுஜா வருணிக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

TNN 18 Aug 2017, 3:17 am
சென்னை : நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியில் புதிதாக இணைந்துள்ள சுஜா வருணிக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil bigg boss tamil wild card entry suja varunee salary
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுஜா வருணிக்கு ஒவ்வொரு வாரத்திற்கு லட்சக் கணக்கில் சம்பளம்!?


பிக் பாஸ் வீட்டில் வந்த பின்னர் சில பிரபலங்கள் தங்கள் மதிப்பை இழப்பது ஒருபுறம் இருந்தாலும், சாதாரண ஆள் கூட மக்களுக்கு நன்கு அறிமுகமாகும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

இதில் தங்களின் செயலால் மக்களுக்கு பிடித்தால் அவர்களை எப்படி கொண்டாடுவார்கள் என்பதை ஓவியா விஷயத்தில் பலரும் அறிந்திருப்பர். ஓவியா போட்டியிலிருந்து தானாக வெளியேறிய பின்னர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளதால், தற்போது புதிதாக இரண்டு போட்டியாளர்களை களமிறக்கியுள்ளனர்.



சமீபத்தில் வெளியான குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணி பிக் பாஸ் குடும்பத்தில் இணைந்துள்ளார். பின்னர் நேற்று ஹரிஸ் என்ற நடிகரும் இணைந்துள்ளார்.

லட்சக்கணக்கில் சம்பளம் :
தற்போதைக்கு கையில் எந்த படமும் இல்லாத சுஜா வருணிக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க வாரம் ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வழங்க பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்