ஆப்நகரம்

ஜூலிக்கு வந்த யோகத்த பாருங்க: எப்படியெல்லாம் நடிக்கிறார்: வைரலாகும் வீடியோ!

விளம்பரத்தில் நடித்துள்ள ஜூலி, வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

TNN 23 Dec 2017, 4:33 pm
விளம்பரத்தில் நடித்துள்ள ஜூலி, வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil biggboss fame julie acting in ad film
ஜூலிக்கு வந்த யோகத்த பாருங்க: எப்படியெல்லாம் நடிக்கிறார்: வைரலாகும் வீடியோ!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மிகவும் பிரபலமடைந்தாலும், இவரது சில செயல்களால் மக்களின் வெறுப்பைப் பெற்றார். இதன் காரணமாக கமல்ஹாசன் அவரை தன்னுடைய தங்கை என்று சொல்லி எலிமினேட் ஆன அவரை வெளியே அனுப்பி வைத்தார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Working with ARUNA Appalam team was really wonderful. Thank u guys...... pic.twitter.com/r4FH1SsJsY — maria juliana (@lianajohn28) December 23, 2017 இதையடுத்து விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்திலும், விஜய் படத்திலும் நடிக்கிறார். இப்படி பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அதில், விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீந்தான் அது. ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது ஒரு அப்பளம் விளம்பரத்திலும் ஜூலி நடித்துள்ளார். இந்த வீடியோவை ஜூலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்