ஆப்நகரம்

‘தப்பாட்டம்’ ஹீரோவுக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ ஜூலி!

‘பிக்பாஸ்’ ஜூலி, ‘தப்பாட்டம்’ படத்தில் நடித்த துரை சுதாகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 2 Jan 2018, 3:13 pm
‘பிக்பாஸ்’ ஜூலி, ‘தப்பாட்டம்’ படத்தில் நடித்த துரை சுதாகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil biggboss julie will pair with durai suthakar
‘தப்பாட்டம்’ ஹீரோவுக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ ஜூலி!


‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்த ஜூலி, தற்போது தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அந்தப் படம் பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. ஜூலி கதாநாயகியாக நடிக்கும் படத்தை கே 7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படம் குறித்து ஜூலி கூறுகையில், “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்“ என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் நாயகனாக ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்