ஆப்நகரம்

பைக்கில் வலம் வரும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி!

பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Dec 2017, 4:20 pm
பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil biggboss tamil fame actress suja varunee latest pic with bike
பைக்கில் வலம் வரும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாச் நிகழ்ச்சியின் பாதியில் உள்ளே வந்தவர் சுஜா வருணி. தொடர்ந்து ஓவியாவைப் போன்று பண்ணுவதாக சில விமர்சனங்களும் அவருக்கு வந்தது. போட்டியின் போது சுஜாவுக்கும், சினேகனுக்கும் இடையில் மோதலும் ஏற்பட்டது. நிகழ்ச்சியின் போது சுஜா கொஞ்சி குழைந்து பேசுவதாகவும் கூறப்பட்டது. பயந்த சுபாவம் கொண்டவராக இருந்த சுஜா அப்பா சென்டிமென்டைக்கொண்டு கமலிடம் நீலிக்கண்ணீர் வடித்தார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிவதற்குள் சில நாட்கள் முன்னதாகவே வெளியேறினார்.

😬small things will make you feel happy🏍 #BikerGirl pic.twitter.com/qQqIrL35qr — Suja Varunee (@sujavarunee) December 21, 2017 ஓவியாவைப் போன்று தனக்கும் பட வாய்ப்புகள் வரும் என்று எண்ணிய சுஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், சினிமா வாய்ப்புக்காக, அவ்வப்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கூட, பைக்கில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்