ஆப்நகரம்

கமல் அப்பாவுக்கு என் மேல அவ்வளவு பாசம்: சுஜா வருணி

கமல் அப்பாவுக்கு என் மீது மட்டும் தான் அதிக பாசம் என்று சுஜா வருணி தெரிவித்துள்ளார்.

TNN 21 Nov 2017, 6:52 pm
கமல் அப்பாவுக்கு என் மீது மட்டும் தான் அதிக பாசம் என்று சுஜா வருணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil biggboss tamil fame suja varunee says about kamalhaasan
கமல் அப்பாவுக்கு என் மேல அவ்வளவு பாசம்: சுஜா வருணி


தமிழ் சினிமாவில் வர்ணஜாலம், ஐந்தாம் படை, மிளகா, வைத்தீஸ்வரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு, பல படங்களில் சிறப்புத் தோற்றத்திலும், குத்துப் பாடல்களிலும் வலம் வந்துள்ளார். இந்த நிலையில் வாய்ப்பில்லாமல் இருந்த இவருக்கு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் பெண்ணாக பிறந்ததால் தன்னுடைய அப்பா தன்னை சிறு வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார். தொடர்ந்து தந்தை நினைவால் அழுதுக் கொண்டே இருந்த சுஜா ஒரு முறை என்னுடைய அப்பா என் வீட்டிற்கு வந்தால் போதும். அவருக்கு என் கையால் என் சாப்பாடு போட வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் கூறுகையில், ஒரு 3 மாதம் பாருங்கள். இல்லையென்றால் நான் வருகிறேன், சாப்பிட என்றார். இதைக் கேட்ட அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து 50 நாட்களாகியும், சுஜாவின் அப்பா வந்தாரா? இல்லை அவருக்குப் பதிலாக கமல்ஹாசன் வரப்போகிறாரா என்பது தொடர்பாக சுஜா கூறுகையில், நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு என் அப்பா வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இதுவரை வரவில்லை. கமல் அப்பா வருவதாக சொல்லியிருந்தார். அவர் இப்போது வரவேண்டாம்.

என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வரவேண்டும் என்று கூறியிருக்கிறேன். அவரும் நடத்தி வைப்பதாக சொல்லியிருக்கிறார். திருமணத்திற்கான நேரம் வரும்பொழுது நானே என்னுடைய திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால், எனக்கு பிடித்தமான கதைகளில் மட்டும் நான் ஓகே சொல்லி நடிக்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அப்பாவுக்கு என் மீது பாசம் அதிகம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் என்னிடம் மட்டும் கொஞ்சம் கூடுதல் கனிவோடும், அன்போடும் பேசுவார். மற்ற போட்டியாளர்கள் உங்களை கட்டியணைத்துக் கொள்ளலாமா? முத்தம் கொடுத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டு செய்த போது நான் கேட்காமலேயே இதையெல்லாம் செய்தார் என்னுடைய அப்பா கமல் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்