ஆப்நகரம்

மார்க் எடுக்க இப்படியெல்லாம் கஷ்டப்படனுமா? பலூனை உடைக்க மல்லுக்கட்டும் பிரபலங்கள்

மார்க் எடுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் அனைவரும் மல்லுக்கட்டிக் கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது.

TNN 18 Sep 2017, 10:19 pm
மார்க் எடுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் அனைவரும் மல்லுக்கட்டிக் கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil biggbosstamil suja and snehan fight for balloon task
மார்க் எடுக்க இப்படியெல்லாம் கஷ்டப்படனுமா? பலூனை உடைக்க மல்லுக்கட்டும் பிரபலங்கள்


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்றைய 86வது நாளில் சினேகன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சினேகனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றனர். இதையடுத்து, “முடிந்தால் உடைத்துப் பார்” டாஸ் கொடுக்கப்பட்டது. இதில், பிக்பாஸில் இருக்கும் 6 பேரும் இரு அணிகளாக பிரிந்து கொண்டு, இருவர் பலூனை ஊதி, அதனை உடைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். 3 சுற்றுகள் இருக்கும் இந்த டாஸ்க்கில் சுஜா மற்றும் ஹரீஷ் அணி ஒரு மதிப்பெண் பெற்றது.



இதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வதும், மல்லுக்கட்டும் விதமாகவும் இந்த டாஸ்க் அமைந்துள்ளது. இது பார்க்கும் ரசிகர்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் போர்டு சுஜா மேல் விழுவதும், பின்னர், சினேகன் பனியனை பிடித்து சுஜா இழுப்பதமான நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 2வது சுற்றில் இரு அணிகளும் எந்த மதிப்பெண்களும் எடுக்கவில்லை. 3வது சுற்றில் இரு அணிகளும் ஓரளவு மார்க் எடுத்துள்ளனர். இறுதியில், பிந்து, சுஜா, ஹரீஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்