ஆப்நகரம்

பிகில் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

விஜய்யின் பிகில் படம் ரிலீஸான முதல் நாள் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 26 Oct 2019, 9:48 am
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்த பிகில் படம் நேற்று ரிலீஸானது. படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.
Samayam Tamil bigil


இந்நிலையில் பிகில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிகில் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இருப்பினும் பிகிலால் சர்கார் படத்தின் முதல் நாள் தமிழக வசூலான ரூ. 31.5 கோடி சாதனையை முறியடிக்க முடியவில்லை.

பிகில் சோலோவாக ரிலீஸாகாமல் கார்த்தியின் கைதியுடன் சேர்ந்து வந்ததால் வசூல் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Bigil review: ஸ்லோவா போனாலும் விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்- பிகில் விமர்சனம்

சென்னையில் மட்டும் பிகில் ரூ. 1.80 கோடி வசூலித்திருக்கிறது. பிகில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, அமெரிக்காவிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸில் பிகில் படம் கசிந்திருப்பதால் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிகில் படத்தில் இலவச விளம்பரம் கிடைப்பதற்கான அம்சங்கள் இருந்தாலும் அது இம்முறை விஜய்க்கு ஒர்க்அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.

ரிலீஸான சில மணிநேரத்தில் பிகிலை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்: விஜய் பாவம்

பிகில் படம் நன்றாக இருந்தாலும் நீளம் அதிகம் என்று புகார் எழுந்துள்ளது. இருப்பினும் விஜய் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அட்லி விஜய் ரசிகர்களை மனதில் வைத்து தான் படத்தை எடுத்துள்ளார். அந்த வகையில் அட்லி நினைத்தது நடந்துவிட்டது எனலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்