ஆப்நகரம்

vijay விஜய்யுடன் பிகில் முதல் ஷாட்! மனம் திறந்த சிங்கப்பெண் ரெபா!

நடிகை ரெபா மோனிகா பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த முதல் ஷாட் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 9 Apr 2020, 8:28 am
கொரோனா தனித்திருத்தல் காரணமாக சினிமா பிரபலங்கள் பாடுவது, ஆடுவது, ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது என பல விசயங்களை செய்து வருகின்றனர். சிலர் இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவில் வந்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்வுகளையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் பிகில் சிங்கப்பெண் வந்த லைவில் விஜய் பற்றி பேசியுள்ளார்.
Samayam Tamil reba monica


பிகில் படத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரெபா. அந்த கதாபாத்திரம் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பிறகு தனது முகத்தை வெளிக்காட்ட விரும்பாமல், கால்பந்து போட்டிக்கே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடைக்கும். அவரை டீம் கோச்சான விஜய் ஊக்கப்படுத்தி கால்பந்து விளையாட்டில் பங்கு கொள்ள செய்வார்.

கால்பந்து விளையாட்டு ஆரம்பிக்கும் முந்தைய காட்சியில் ரெபா கதாபாத்திரத்துக்கு ஆசிட் அடித்தவனை நேருக்கு நேர் நிறுத்தி சிங்கப்பெண் பஞ்ச் பேச வைப்பார் விஜய். இதுதான் ரெபா மோனிகா ஜான், விஜய்யுடன் நடித்த முதல் காட்சியாம்.

இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ரெபா இதனை நினைவு கூர்ந்துள்ளார். விஜய்யுடன் நடிக்கப்போகும் காட்சியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார் அவர். விஜய் அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நீங்கள் நிச்சயம் பெருமையடைவீர்கள் என தெரிவித்ததாகவும் ரெபா மனம் திறந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்