ஆப்நகரம்

வெறித்தனம்! வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண்டியம்மா!

வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர் ரோபோ ஷங்கரும் அவரது மகள் இந்திரஜாவும்.

Samayam Tamil 2 Apr 2020, 11:10 am
விஜய் நடிப்பில் விரைவில் ரிலீசாகவுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் வரும் வாத்தி கமிங் பாடல், மிகவும் வைரலானது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரோபோஷங்கரும் அவரது மகள் இந்திரஜாவும் இந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Samayam Tamil pandiammal roboshankar


ரோபோஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இதோ



ரோபோஷங்கரும் அவரது மகள் இந்திரஜாவும் செம்மயாக ஆடியிருக்கிறார்கள். இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரின் இந்த கதாபாத்திரத்துக்கு பிறகு ரசிகர்களிடையே பரவலாக சென்றடைந்துவிட்டார். ஏற்கனவே ரோபோஷங்கர் நன்றாக நடனமாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் பாண்டியம்மாளும் சேர்ந்து ஆடியதால், அதிக அளவில் இந்த வீடியோ ஷேர் செய்யப்படுகிறது.

கமல் மாதிரி ஆடுறீங்க..

இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ள சிலர், ரோபோஷங்கர் கமல் மாதிரி ஆடுவதாக கூறியுள்ளனர்.


பலரும் அருமை, அட்டகாசம் என கமெண்ட் செய்துள்ளனர். சிலர் பாண்டியம்மா சூப்பராக ஆடுறீங்க என்று கூறியுள்ளனர்.




சத்தியமா சொல்றேன் சார் வேற லெவல் டான்ஸ். செம்ம ஸ்பீடு செம்ம எனர்ஜி என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்