ஆப்நகரம்

காதலிக்கிறேனா? உண்மையை கூறிய பிந்து மாதவி

பிரபல நடிகை பிந்து மாதவி தனக்கு ஒருவர் மீது கிரஷ் இருக்கிறது என கூறியுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2020, 7:07 pm
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துள்ளவர் பிந்து மாதவி. ஆந்திராவை சேர்ந்த நடிகையான அவர் தெலுங்கு சினிமாவில் தன் பயணத்தை தொடங்கினாலும், தற்போது தமிழ் சினிமா மட்டுமே அவருக்கு தற்போது கைகொடுத்து வருகிறது.
Samayam Tamil Bindhu Madhavi


கைவசம் ஒரு சில தமிழ் படங்கள் வைத்திருக்கும் அவர் தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங் இல்லாததால் வீட்டில் தான் இருக்கிறார்.

அதனால் போர் அடிக்கிறது என சொல்லி தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவரிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா இல்லை சிங்கிள் தானா என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பிந்து மாதவி. "ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது. அதை கமிடெட் என கூற முடியாது. அதனால் நான் சிங்கிள் தான்" என கூறியுள்ளார்.


மேலும் ரசிகர் ஒருவர் உங்கள் குழந்தை பருவ புகைப்படத்தை பகிருங்கள் என கேட்டார். அதை ஏற்று பிந்து ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார்.

அதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்