ஆப்நகரம்

பாஜக தலைவர்களே..முதல்ல அயோத்தி வீதியில கஷ்டப்படும் மக்களை பாருங்க: பிரகாஷ்ராஜ்!

கர்நாடக அரசியலில், பாஜக ஆட்சியில் இல்லாத போதும், ஆட்சிக்கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டு வருவதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2019, 4:45 pm
அயோத்தியின் வீதிகளில் ஏழை மக்கள் எப்படி மோசமான சூழலில் வாழ்கிறார்கள் என்பதை பார்க்குமாறு பாஜக தலைவர்களை, நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.
Samayam Tamil பாஜக தலைவர்களே..முதல்ல அயோத்தி வீதியில கஷ்டப்படும் மக்களை பாருங்க: பிரகாஷ்ராஜ்!
பாஜக தலைவர்களே..முதல்ல அயோத்தி வீதியில கஷ்டப்படும் மக்களை பாருங்க: பிரகாஷ்ராஜ்!


தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது மத்திய பெங்களூரு தொகுதியிலிருந்து நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அயோத்தியை வைத்து ஏசி அறைகளில் அமர்ந்து அரசியல் நடத்துகின்றனர். முதலில் அயோத்தியின் வீதிகளுக்கு வந்து ஏழை மக்கள் எப்படி மோசமான சூழலில் வாழ்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் பார்க்கட்டும்.

இந்தியாவில் இனி எந்த ஒரு தனிப்பெரும் கட்சியும் முழு அளவு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாநில அரசியல் கட்சியும் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சித்து வருகிறது. பாஜக, கர்நாடக அரசியலில், ஆட்சியில் இல்லாத போதும், ஆட்சிக்கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டு வருவதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்