ஆப்நகரம்

நெல்சன் மேல ஏன் இவ்வளவு வன்மம்.?: ப்ளூ சட்டை மாறனை விளாசும் நெட்டிசன்கள்.!

இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 8 Jun 2022, 5:32 pm

கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திற்காகவெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

Samayam Tamil Nelson Dilipkumar
Nelson Dilipkumar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும்‘விக்ரம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய முதல் நாளிலே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி ‘விக்ரம்’ படம் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல்.

அதுமட்டுமல்லாமல் ‘விக்ரம்’ படத்தில் பணியாற்றிய அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் இரு சக்கர வாகனம் பரிசளித்துள்ளார். இந்நிலையில் இதனை ஒருவேளை ‘பீஸ்ட்’ படம் ஹிட்டாகி இருந்தால் நெல்சனுக்கு ஜெட் விமானம் விஜய் பரிசளித்திருப்பார் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். ‘விக்ரம்’ படம் வெளியானதில் இருந்து நெல்சனின் ‘பீஸ்ட்’ படத்தை ஒப்பீட்டு ஏகப்பட்ட மீம்ஸ்கள் இணையத்தில் குவிந்து வருகிறது.

நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்: ‘விக்ரம்’ படம் குறித்து பிக்பாஸ் நடிகை பரபரப்பு பதிவு.!

இந்நிலையில் நெல்சனை கலாய்த்து ப்ளு சட்டை மாறன் பகிர்ந்துள்ள மீம்சை விளாசி வருகின்றனர் ரசிகர்கள். அஜித் ரசிகர்கள் இவரை சப்போர்ட் பண்ணாதீங்க. நாளைக்கே அஜித்தை ட்ரோல் பண்ணி மீம்ஸ் போடுவாரு. எல்லா ஹீரோவோட ரசிகர்களையும் ட்ரிக்கர் பண்ணி விடுறாரு என மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், நெல்சன் மேல அப்படி என்ன எல்லாருக்கும் ஒரு வன்மம் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும் வசூலில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்தப்படம் மூலம் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்