ஆப்நகரம்

நீங்க ரூஃப் டாப்புல நின்னு கத்தினாலும் இல்ல... மீண்டும் அஜித்தை சீண்டும் ப்ளுசட்டை மாறன்!

மீண்டும் நடிகர் அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் சீண்டியுள்ளார் ப்ளுசட்டை மாறன்.

Samayam Tamil 15 Jun 2022, 5:51 pm
மீண்டும் நடிகர் அஜித்தை சீண்டி ப்ளுசட்டை மாறன் ஷேர் செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil blue sattai marans tweet makes ajith fans tensed
நீங்க ரூஃப் டாப்புல நின்னு கத்தினாலும் இல்ல... மீண்டும் அஜித்தை சீண்டும் ப்ளுசட்டை மாறன்!


தரக்குறைவாக விமர்சனம்

பிரபல யூட்யூபராகவும் திரைப்பட விமர்சகராகவும் வலம் வருபவர் ப்ளு சட்டை மாறன். ஆண்டி இந்தியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தடம் பதித்துள்ளார். திரைப்படங்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை செய்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ப்ளுசட்டை மாறனை கன்னாபின்னாவென திட்டி தீர்த்து வருகின்றனர்.

அஜித் குறித்து..

ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத ப்ளுசட்டை மாறன், தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் படங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக அஜித்தின் வலிமை படத்தை உண்டு இல்லை என செய்து வருகிறார். வலிமை படம் ரிலீஸ் ஆன போதே படத்தையும் அஜித்தையும் மோசமாக விமர்சத்தார்.

மீண்டும் சீண்டி

படத்தின் வசூல் குறித்தும் பேசி அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் ப்ளுசட்டை மாறன். அதாவது டிவிட்டரில் வலிமை படத்தின் வசூல் குறித்து பேசி சீண்டியுள்ளார் ப்ளூசட்டை.

என்னதான் கத்தினாலும்

அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்களின் பட்டியலை ஷேர் செய்துள்ள ப்ளூசட்டை மாறன், டாப் பத்தில் அஜித்தின் படம் எதுவும் இல்லை. வேற லெவல், பிளாக் பஸ்டர், 300 கோடி 500 கோடி என ரூஃப் டாப்பில் நின்று கத்தினாலும் ஒன்று கூட இல்லை என பதிவிட்டுள்ளார். ப்ளுசட்டையின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், வச்சு செய்து வருகின்றனர்.

Twitter-Blue Sattai Maran

அடுத்த செய்தி

டிரெண்டிங்