ஆப்நகரம்

‘வல்லவனுக்கு வல்லவன்’ டப்பிங்கை ஆரம்பித்த பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா தான் நடித்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்

TNN 31 Mar 2016, 2:25 pm
நடிகர் பாபி சிம்ஹா தான் நடித்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.
Samayam Tamil bobby simha has started dubbing of vallavanukku vallavan
‘வல்லவனுக்கு வல்லவன்’ டப்பிங்கை ஆரம்பித்த பாபி சிம்ஹா


பாபி சிம்ஹா ‘ஜிகர்தண்டா’ படம் மூலம் அசால்ட் சேதுவாக, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்த அசால்ட் என்ற பெயரில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தை தயாரித்தும். நடித்தும் வருகிறார் பாபி சிம்ஹா.

படத்தை டைரக்டர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணியை தொடங்கியுள்ளனர் படக்குழுவினர். இதற்காக பூஜை போடப்பட்டு, தனது டப்பிங் பணியை பாபி சிம்ஹா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ஷிவேதா நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து பாபி சிம்ஹா, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்