ஆப்நகரம்

பாகிஸ்தானா?... வேணவே வேணாம் என வாய்ப்பை மறுத்த இந்தி நடிகை!

பாகிஸ்தான் விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் நடிகை பிராச்சி தேசாய்.

TNN 17 Dec 2016, 4:12 pm
பாகிஸ்தான் விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் நடிகை பிராச்சி தேசாய்.
Samayam Tamil bollywood actor prachi desai turns down pakistani advertisement
பாகிஸ்தானா?... வேணவே வேணாம் என வாய்ப்பை மறுத்த இந்தி நடிகை!


பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி தேசாய். சமீபத்தில் பாகிஸ்தானின் அழகுசாதன பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் தற்போது இருநாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான சூழலை காரணம் காட்டி அந்த விளம்பர வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் பிராச்சி.

இதுப்பற்றி பிராச்சி கூறியிருப்பதாவது... ‘நான் பாகிஸ்தான் நாட்டின் எந்த விளம்பரத்திலும் நடிக்க போவது கிடையாது. இதனால் எனக்கு வந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த விளம்பர படத்தில் நடிக்காமல் இருப்பது தான் நல்லது’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்