ஆப்நகரம்

டிரெஸ் இல்லாமல் போராடும் நடிகைக்கு கங்கனா ரனாவத் அட்வைஸ்!

ஆடை இல்லாமல் போராடும் நடிகைக்கு கங்கனா ரனாவத் அறிவுரை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 5:37 pm
ஆடை இல்லாமல் போராடும் நடிகைக்கு கங்கனா ரனாவத் அறிவுரை வழங்கியுள்ளார்.
Samayam Tamil kangana


தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் சர்ச்சை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரை நிர்வாண போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நடிகர் சங்கத்திலும் அவரது உறுப்பினர் படிவமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னை பாலியல் தொல்லை செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீரெட்டியின் போராட்டம் குறித்து அதிர்ச்சியடைந்த கங்கனா ரனாவத் கூறுகையில், நாம் ஒரு விஷயத்திற்காக போராட்டம் நடத்துகிறோம் என்றால், அந்த பிரச்சனை தான் பெரிதாக்கப்பட வேண்டும். ஸ்ரீரெட்டி போன்று போராட்டம் நடத்தினால், எந்த பயனும் இல்லை. சினிமாவில் பாலியல் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பாலியல் பிரச்சனையில் சிக்கும் நடிகைகள் சினிமா உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் அவமானகரமானது என்று எண்ணுவார்கள். அதற்கு ஆதரவாகவும் பேச மாடடர்கள். ஏனென்றால், ஸ்ரீரெட்டியின் போராட்டம் தான் அதற்கு முக்கிய காரணம். ஒருவரது பிரச்சனையை எடுத்துச்சொல்ல எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதில், எது சரியானது என்பதை மட்டும் தேர்வு செய்து போராட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்