ஆப்நகரம்

பல்லியுடன் செல்பி எடுத்த ராதிகா ஆப்தே!!

பாலிவுட்டின் பிரபல நடிகை ராதிகா ஆப்தே பல்லி ஒன்றை தனது முகத்தில் வைத்து செல்பி எடுத்துள்ளார். தற்போது அந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Samayam Tamil 24 Jan 2018, 12:33 pm
பாலிவுட்டின் பிரபல நடிகை ராதிகா ஆப்தே பல்லி ஒன்றை தனது முகத்தில் வைத்து செல்பி எடுத்துள்ளார். தற்போது அந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil bollywood actress radhika apte shared a instragram photo where she took a selfie with a house lizard
பல்லியுடன் செல்பி எடுத்த ராதிகா ஆப்தே!!


பாலிவுட் நடிகைகளில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானவர் ராதிகா ஆப்தே. தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் நன்கு பிரபலமானார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே அக்ஷய் குமாருடன் இணைந்து ‘பேடுமேன்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்லி ஒன்றை தனது முகத்தில் வைத்து செல்பி எடுத்து அதை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அவர் முகத்தில் இருக்கும் பல்லி உண்மையானதா அல்லது போலியா என்பது தெரியவில்லை. இருப்பினும், பல்லியைக் கண்டால் பெண்கள் அலறி அடித்து ஓடும் வேளையில், இவர் தைரியமாக போஸ் கொடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்