ஆப்நகரம்

விஜய் படத்திற்கு பாலிவுட் காஸ்டியூம் டிசைனர்கள்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் பாலிவுட்டில் இருந்து காஸ்டியூம் டிசைனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

TNN 24 Apr 2017, 3:08 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் பாலிவுட்டில் இருந்து காஸ்டியூம் டிசைனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil bollywood costume designers worked for vijays new movie
விஜய் படத்திற்கு பாலிவுட் காஸ்டியூம் டிசைனர்கள்!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அப்பா & -மகன்கள் என மூன்று கெட்டப்பில் விஜய் நடிப்பதாக தெரிகிறது. இந்த மூன்று கெட்டப்புகளிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது பாடிலாங்குவேஜ், ஹேர்ஸ்டைல் என ஒவ்வொன்றையும் வேறுபடுத்தி நடித்து வருகிறார் விஜய்.

அதேபோல் இந்த கெட்டப்புகளை இன்னும் வித்தியாசப்படுத்திக்காட்டும் முயற்சியாக, இரண்டு பாலிவுட் காஸ்டியூம் டிசைனர்கள் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இதில் 1980 காலகட்டத்தில் நடித்துள்ள அப்பா விஜய்க்கான காஸ்டியூம் டிசைன்களை நீரஜ் கோனா என்பவர் வடிவமைத்துள்ளார். மற்ற இளவட்ட விஜய்களுக்கான உடைகளை கோமால் ஷஹானி வடிவமைத்துள்ளார்.இவர், ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தெறி படங்களில் விஜய்க்கான உடைகளை வடிவமைத்தவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்