ஆப்நகரம்

இவர்களால் விஜய் படத்தின் வசூல் பாதிக்குமா?

விஜய் படம் வெளியாகும் அன்று அமீர்கான், அஜய் தேவ்கன் நடித்த படங்கள் வெளியாவதால் விஜய் படத்திற்கு வசூல் பாதிப்பு வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

TOI Contributor 24 Apr 2017, 3:46 pm
விஜய் படம் வெளியாகும் அன்று அமீர்கான், அஜய் தேவ்கன் நடித்த படங்கள் வெளியாவதால் விஜய் படத்திற்கு வசூல் பாதிப்பு வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
Samayam Tamil bollywood films may affect vijays film box office
இவர்களால் விஜய் படத்தின் வசூல் பாதிக்குமா?


நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. நடிகர் விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடாவிலும் விஜய்க்கான மார்க்கெட் விரிவாக வருகிறது. விஜய் நடித்த ‘தெறி’ படம் அங்கு 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்யின் 61வது படம் வெளியாகும் அன்று அமீர்கானின் ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’, அஜய் தேன்கன் நடிக்கும் ‘கோல்மால்’ ஆகிய படங்களும் வெளியாகிறது. விஜய் படத்திற்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் வராது. இருந்தாலும், கேரளா, வட இந்தியா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் விஜய்யின் 61 படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற ஒரு அச்சம் எழுந்துள்ளது.

Bollywood films may affect Vijay’s film box office

அடுத்த செய்தி

டிரெண்டிங்