ஆப்நகரம்

Badhaai Ho Tamil Remake: 4 மொழிகளில் பதாய்ஹோ: ரீமேக் உரிமையை வாங்கிய போனி கபூர்!

பாலிவுட்டில் வெளியான பதாய்ஹோ படத்தின் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போன் கபூர் கைப்பற்றியுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2019, 12:58 pm
பாலிவுட்டில் வெளியான பதாய்ஹோ படத்தின் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போன் கபூர் கைப்பற்றியுள்ளார்.
Samayam Tamil badhaai ho


பாலிவுட் இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மாவின் இயக்கத்தில், ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பதாய் ஹோ. காமெடி நிறைந்த பேமிலி திரைப்படமாக உருவான இப்படத்தை ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் குரோம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தசரா திருவிழாவை முன்னிட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.

வெளியானது முதல் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ரூ.221.44 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது என்று விக்கிபீடியா தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்திற்கான தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கான தமிழ் அல்லது தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு முதலில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போனி கபூர், அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி அதன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்