ஆப்நகரம்

​ஸ்ரீ தேவி மகள்களை வீட்டிற்கு அழைத்த அண்ணன் அர்ஜுன் கபூர்!!

போனி கபூரின் முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூர், தனது சகோதரிகளான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோரை தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2018, 4:04 pm
போனி கபூரின் முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூர், தனது சகோதரிகளான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோரை தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார்.
Samayam Tamil boney kapoor janhvi and khushi spotted at arjun kapoors house
​ஸ்ரீ தேவி மகள்களை வீட்டிற்கு அழைத்த அண்ணன் அர்ஜுன் கபூர்!!


கடந்த மாதம், உறவினர் திருமணத்தில் பங்கேற்கபதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் விழுந்து எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, பிப்ரவரி 28 அன்று இந்தியாவுக்கு எடுத்துவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர், ஸ்ரீதேவியின் உடல் மார்ச் 1 ஆம் தேதி மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, போனி கபூரின் முதல் மனைவி மோனாவின் மூத்த மகனும் நடிகருமான அர்ஜுன் கபூர், ஸ்ரீதேவியின் மறைவிற்கு முன் ஸ்ரீ தேவியிடமோ அல்லது அவர்களின் குழந்தைகளிடமோ பெரிதாக எவ்வித உறவும் வைத்துக்கொள்ளாமல் இருந்து வந்தார்.
  #boneykapoor -#khushikapoor #janhvikapoor at #arjunkapoor home A post shared by Viral Bhayani (@viralbhayani) on Mar 16, 2018 at 11:23am PDT இந்நிலையில், ஸ்ரீதேவி இறந்த நிலையில் தாயில்லாமல் தவிக்கும் அவர்களை அர்ஜுன் கபூர் தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். இதையடுத்து, போனி கபூர் தனது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூருடன் அர்ஜுன் கபூரின் இல்லத்திற்கு நேற்று சென்றுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்