ஆப்நகரம்

Sridevi Sarees: நடிகை ஸ்ரீதேவியின் புடவை ஏலம் : தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தரும் போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மறைந்தார். தற்போது அவரின் புடவை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Feb 2019, 4:21 pm
நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மறைந்தார். தற்போது அவரின் புடவை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sree Devi


தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை சென்று வெற்றி கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி அவர் குளியலறையில் இறந்து கிடந்தார். பல்வேறு கோணங்களில் அவரின் மரணம் குறித்து பேசப்பட்டது.

சேலை ஏலம் :

கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் ஒரு கோடா வகை சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை இந்தியா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறார்.

ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக இந்த தொகை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஏலம் விடும் ஒரு இணையதளத்தின் மூலமாக அவரின் சேலையை ஏலம் விடப்படுகிறது. ரூ. 40,000 ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்