ஆப்நகரம்

ஒரே படத்தில் நடிக்கும் நயன், சமந்தா! ஆனால், வேறு வேறு ரீமேக்!

நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஒரே படத்தின் வேறு வேறு ரீமேக்கில் நடிக்கவுள்ளனர்.

TNN 12 Dec 2017, 3:49 pm
நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஒரே படத்தின் வேறு வேறு ரீமேக்கில் நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil both nayanthara and samantha acting in kannada film u turn remake in tamil and telugu
ஒரே படத்தில் நடிக்கும் நயன், சமந்தா! ஆனால், வேறு வேறு ரீமேக்!


பவன் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் யு டர்ன். இதில், விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகிய படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருந்தார். சூப்பட் ஹிட்டான இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை சத்யா பட புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். தமிழைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில், சமந்தா ஹீரோயினாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வந்து ஹிட்டான குயின் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடிக்கின்றனர். அதே போன்று யு டர்ன் படமும், தற்போது இரு மொழிகளில் மட்டும் ரீமேக் செய்யப்படுகிறது. விரைவில் இப்படமும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்