நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார் விஜய். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் நிறைவடைந்துவிடும். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. படத்தின் காட்சிகள் கசிந்துவிடக் கூடாது என்று நெல்சன் இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்.
அப்படி இருந்தும் பீஸ்ட் செட்டில் இருந்து ஒரு வீடியோ கசிந்து வைரலாகிவிட்டது. அந்த வீடியோவில் கருப்பு நிற கோட் சூட்டில் விஜய் செம ஸ்டைலாக இருக்கிறார். கசிந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தயவு செய்து யாரும் அந்த வீடியோவை ஷேர் செய்ய வேண்டாம் என்று விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த வீடியோவை கசியவிட்டது யார் என்று கண்டுபிடியுங்கள் என நெல்சனிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
டாக்டர் படத்தின் வெற்றியால் செம குஷியில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அதே சமயம் டாக்டரை பார்த்த ரசிகர்களுக்கு பீஸ்ட் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 66 என்று அழைக்கப்படும் அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.