ஆப்நகரம்

”24 லட்ச ரூபாய் பண மோசடி” : நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் புகார்..!

தனக்கு தர வேண்டிய 24 லட்ச ரூபாய் பணத்தை தராமல் ஏ மாற்றுவதாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

TNN 28 Apr 2017, 11:13 am
தனக்கு தர வேண்டிய 24 லட்ச ரூபாய் பணத்தை தராமல் ஏ மாற்றுவதாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil businessman files case against shilpa shetty husband over rs 24 lakh unpaid dues
”24 லட்ச ரூபாய் பண மோசடி” : நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் புகார்..!


பொருட்கள் விற்பனை செய்யும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் “பெஸ்ட் டீல்” என்ற தொலைக்காட்சியின் இயக்குநர்களாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உட்பட ஐந்து பேர் செயல்பட்டனர் . இந்நிலையில் இந்த தொலைக்காட்சி வழியாக விற்பனை செய்யப்பட்ட தனது நிறுவன போர்வைகளுக்காக தர வேண்டிய 24 லட்ச ரூபாயை தராமல், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ஏமாற்றி வருவதாக தொழிலதிபர் பலோடியா என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

” 2015-ஆம் ஆண்டு பெஸ்ட் டீல் தொலைக்காட்சியின் மேலாளரான கவுரவ் கர்க் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். தங்களின் தொலைக்காட்சியில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா போன்ற பிரபலங்கள் இயக்குநராக இருப்பதாகவும், எனவே தங்களின் தொலைக்காட்சி வழியாக என்னுடைய தயாரிப்புகளை விற்க வேண்டும் எனவும் கேட்டார். இதற்கு நானும் ஒப்புக் கொண்டேன்.
2015-ஆம் ஆண்டு பெஸ்ட் டீல் தொலைக்காட்சி வாயிலாக விற்பனையான எனது தயாரிப்புகளுக்கான பணம் சரியாக தரப்பட்டது. ஆனால் 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் விற்கப்பட்ட எனது பொருட்களுக்கான 24.12 லட்சம் பணத்தை தராமல் தற்போது வரை என்னை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் திடீரென அந்த தொலைக்காட்சியையும் மூடி விட்டனர். எனவே எனக்கு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும்.” என தனது புகாரில் தொழிலதிபர் பலோடியா தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உட்பட ஐந்து பேர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Businessman files case against Shilpa Shetty, husband over Rs 24 lakh unpaid dues

அடுத்த செய்தி

டிரெண்டிங்