ஆப்நகரம்

Nayanthara : கன்னட தயாரிப்பாளரின் தமிழ் படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மானேஜர் குமார் தயாரிக்கவுள்ள ஒரு தமிழ் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.

Samayam Tamil 25 Feb 2019, 2:42 pm
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடம் பல வருடங்களாக மானேஜராக இருப்பவர் குமார். தற்போது இவர் தமிழில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்மதி என்பவர் இயக்கவுள்ளார்.
Samayam Tamil nayanthara


இவர் இதற்கு முன் தமிழில் ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ‘கோலமாவு கோகிலா’ பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு க்ரைம் கதை. இந்த படத்தில் நடிகை நயன்தாரா இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா ஏற்கனவே ‘தளபதி 63’, ‘கொலையுதிர்க்காலம், ‘சயிர நரசிம்மரெட்டி, லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள ‘ஐரா’ படம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாகிறது. அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘மிஸ்டர்’ லோக்கல்’ படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்