ஆப்நகரம்

விஜய்யை தொடர்ந்து இன்னொரு டாப் ஹீரோவுடன் மோதும் விஜய் சேதுபதி?

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் உடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 21 Aug 2020, 5:04 pm
ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என பல விதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்து அவர் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கு முன்பு விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தாலும் மாஸ்டர் படத்தில் அவர் தளபதி விஜய் உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
Samayam Tamil Vijay Sethupathi


மேலும் விஜய் சேதுபதி தன் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வைத்து இருக்கிறார். அவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன அய்யப்பனும் கோஷியும் படத்தினை தான் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர் என்றும் அதில் பவன் கல்யாண் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜு மேனன் நடித்த ரோலில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என்றும், பிரித்விராஜ் நடித்த ரோலில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு மீடியாக்களில் இது பற்றிய தகவல் கடந்த சில தினங்களாக அதிகம் வெளியாகி வருகிறது. இருப்பினும் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதி சில தெலுங்கு படங்கள் கைவசம் வைத்து இருக்கும் நிலையில், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இருந்து அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அது தெலுங்கு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தது.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் வரும் அய்யப்பன், கோஷி இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் உள்ளது. ஹீரோ வில்லன் என பிரிந்து கூற முடியாத அளவுக்கு இரண்டு கதாபாத்திரங்களும் இருந்தன எண்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அய்யப்பனும் கோஷியும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்கள் நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழில் நடிக்கப்போவது யார் என்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை, அதில் சசிக்குமார் ஒரு ரோலில் நடிக்க உள்ளார் என்று மட்டும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் சில தினங்களுக்கு முன்பு சிம்பு - ஆர். பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் என்று கூட உறுதிப்படுத்தாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அய்யப்பனும் கோஷியும் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் ஜான் ஆப்ரஹாம் வாங்கி இருக்கிறார். அவரே தயாரித்து அந்த படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்