ஆப்நகரம்

சாரதாவின் மனக்குறையை தீர்த்து வைப்பாரா மோகன்லால்?

நடிகை சாரதாவின் மனக்குறையை நடிகர் மோகன்லால் தீர்த்து வைப்பாரா என்பது தெரியவில்லை.

TOI Contributor 21 Feb 2017, 6:24 pm
நடிகை சாரதாவின் மனக்குறையை நடிகர் மோகன்லால் தீர்த்து வைப்பாரா என்பது தெரியவில்லை.
Samayam Tamil can mohanlal resolve actress saradhas problem
சாரதாவின் மனக்குறையை தீர்த்து வைப்பாரா மோகன்லால்?


இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு நடிகை சாரதாவை ஒரு குணச்சித்திர நடிகையாக மட்டும் தெரிந்திருக்கும். ஆனால் அறுபது எழுபதுகளில் கதாநாயகியாக நடித்தவர் சாரதா. மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா.

சாரதா சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது பூர்விகம் தெலுங்கு. இருந்தாலும் மலையாளத்தில் தான் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளடைவில் குணச்சித்திர நடிகையாக மாறினார் சாரதா. இவர் நாளடையில் தமிழ், தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார்.

மலையாளத்தில் சீனியர் நடிகர்களான பிரேம் நசீர், மது, சத்யன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார் சாரதா. இருந்தபோதிலும், நடிகை சாரதாவுக்கு மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காதது ஒரு மனக்குறையாகவே இருந்து வருகிறதாம். சமீபத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் ஆசையை தனது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சாரதா. நடிகர் மோகன்லால் நடிகை சாரதாவின் மனக்குறையை தீர்த்து வைப்பாரா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்