ஆப்நகரம்

அப்லோடு செய்வதில் தாமதமானதால் படப்பாடலை வெளியிட முடியவில்லை: விக்னேஷ் சிவன்!

தானா சேர்ந்த கூட்டம்’பாடலை அப்லோடு செய்வதில் தாமதமானதால் இன்று பாடலை வெளியிட முடியவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Jan 2018, 5:48 pm
தானா சேர்ந்த கூட்டம்’ பாடலை அப்லோடு செய்வதில் தாமதமானதால் இன்று பாடலை வெளியிட முடியவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
Samayam Tamil can not release tsk movie songs says director vignesh shivan
அப்லோடு செய்வதில் தாமதமானதால் படப்பாடலை வெளியிட முடியவில்லை: விக்னேஷ் சிவன்!


சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Goosebumps 🤗🤗🤗☺️☺️☺️👍🏻👍🏻👍🏻 https://t.co/KGhfkJkMmz — Vignesh ShivN (@VigneshShivN) January 5, 2018 இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், மகாராஷ்டிராவில் பந்த் நடப்பதால், திட்டமிட்டபடி பாடல்களை அப்லோடு செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், அது வரும் வரை ஏற்கனவே ரிலீஸான பாடல்களைக் கேட்கும்படி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்