ஆப்நகரம்

‘ரெமோ’ தலைப்பு பிரச்னை தீர்ப்பு தள்ளி வைப்பு!

‘ரெமோ’ படத்தின் தலைப்பு பிரச்னையின் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

TNN 23 Oct 2016, 3:40 pm
‘ரெமோ’ படத்தின் தலைப்பு பிரச்னையின் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
Samayam Tamil case against remo movie title
‘ரெமோ’ தலைப்பு பிரச்னை தீர்ப்பு தள்ளி வைப்பு!


சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘ரெமோ’. படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார். மேலும், ‘ரெமோ’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டதோடு தமிழக அரசின் வரிவிலக்கும் கிடைத்தது. ஆனால், தற்போது ‘ரெமோ’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று சொல்லி அப்படத்திற்கான வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு, லத்தின் வார்த்தையான ‘ரெமோ’ , ஜெர்மன், இத்தாலிய மொழிகளில் வழக்கில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சிவஞானம், ‘ரெமோ’ என்ற வார்த்தை குறித்து சரியான பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று சொல்லி, இதன் தீர்ப்பை நவம்பர் 21ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்