ஆப்நகரம்

ரயீஸ் ரயில் புரொமோஷன்: ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு

'ரயீஸ்' நாயகன் ஷாருக்கான் மீது கோட்டா அரசு ரயில்வே காவல் நிலையத்தில் ரயில் நிலைய வணிகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

misskyra.com 15 Feb 2017, 2:00 pm
மும்பை: 'ரயீஸ்' நாயகன் ஷாருக்கான் மீது கோட்டா அரசு ரயில்வே காவல் நிலையத்தில் ரயில் நிலைய வணிகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil case filed against shah rukh khan for damaging railway property in kota
ரயீஸ் ரயில் புரொமோஷன்: ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு


ஷாருக்கான் நடிப்பில் உருவான 'ரயீஸ்' படத்தை புதுவிதமாக புரொமோஷன் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜன.23ஆம் தேதி மும்பை-தில்லி வரை அகஸ்ட் கிராந்தி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு, ரயில் நிலையங்களில் கூடிய ரசிகர்கள் பட்டாளத்தை சந்தித்து 'ரயீஸ்' படக்குழுவினர் ஆரவாரம் செய்தனர். இதில் வதோதரா ரயில் நிலைய கூட்ட நேரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், தற்போது ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டா ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் விக்ரம் சிங் என்பவர் ரயில்வே நீதிமன்றத்தில் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அவரது புகாரில், கடந்த ஜன.24 அதிகாலை 5 மணியளவில் கோட்டா ரயில் நிலையம் வந்த ரயிலில் பயணித்த ஷாருக்கானை காண ஏராளமானோர் கூடினர். அவர்களை பார்க்க ரயில் பெட்டியின் வாயிலில் நின்று கைகளை நீட்டிய ஷாருக்கான், சில பரிசுகளை ரசிகர்களுக்கு வீசினார். இதனால், ரயில் நடைமேடையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தனது கடை பொருட்கள் சேதமடைந்ததாகவும், கல்லாவில் இருந்து பணத்தை சிலர் திருடிச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் சிங் அளித்த புகாரை ஏற்று கோட்டா ரயில்வே காவல் நிலையத்தில் ஷாருக்கான் மீது கலகம் ஏற்படுத்தியது, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, ரயில்வே காவலரை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ், இவ்வழக்கில் ஷாருக்கான் மட்டுமல்லாது அவருடன் ரயிலில் பயணம் செய்து 'ரயீஸ்' புரொமோஷனில் ஈடுபட்ட மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

'Raees' actor Shah Rukh Khan has been booked by the Kota government railway police on charges of rioting, unlawful assembly, damaging public property and obstructing a railway official. SRK had travelled via August Kranti express from Mumbai to Delhi on January 23 as a part of film promotions for 'Raees'.

அடுத்த செய்தி

டிரெண்டிங்