ஆப்நகரம்

கிளாமர் லிமிட்டை உடைத்தெறிந்த கேத்ரின் தெரசா!

நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கு படத்திற்காக தன்னுடைய கிளாமர் லிமிடை உடைத்தெறிந்துவிட்டார்.

TNN 1 Aug 2017, 8:20 pm
நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கு படத்திற்காக தன்னுடைய கிளாமர் லிமிடை உடைத்தெறிந்துவிட்டார்.
Samayam Tamil catherine tresa leaves her glamour limit
கிளாமர் லிமிட்டை உடைத்தெறிந்த கேத்ரின் தெரசா!


நடிகை கேத்ரின் தெரசா ‘மெட்ராஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தப் ஒரு படத்திலேயே அவர் பிரபலமானார். அதையடுத்து ‘கணிதன்’, ‘கதகளி’, ‘கடம்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘கதாநாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது பல தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

கேத்ரின் ஆரம்பத்தில் கவர்ச்சியில் ஒரு லிமிட்டை தாண்ட மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு நடித்தார். ஆனால், தற்போது அவர் ‘கௌதம் நந்தா’ படத்திற்காக தன்னுடைய கண்டிஷன் எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிட்டார். இந்தப் படத்தில் கேத்ரின் பிகினி உடையணிந்து நடித்துள்ளார். இவரது இந்த கவர்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாம்.

மேலும், இந்தப் படத்தில் கோபிசந்த் நாயகனாக நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹன்சிகாவும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான கிளாமர் ரோல் என்பதால் ஹன்சிகா அந்த படத்தில் இருப்பதைப்பற்றி கவலைப்படாமல் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் கேத்ரின் தெரசா. இந்தப் படம் 28ம் தேதி வெளியாகியுளளது. ‘கௌதம் நந்தா ’படத்தில் கேத்ரின் தெரசா பிகினி உடையணிந்து திரையில் தோன்றும்போது தியேட்டர்களில் விசில் பறக்கிறதாம். இதனால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் கேத்ரின். அடுத்த முழு கமர்ஷியல் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் கேத்ரின் தெரசா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்