ஆப்நகரம்

‘தெறி’ படத்தில் எமி ஜாக்சன் கேரக்டரில் கேத்ரின் தெரசா!

‘தெறி’ தெலுங்கு ரீமேக் படத்தில் எமி ஜாக்சன் கேரக்டரில் நடிகை கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 3:28 pm
‘தெறி’ தெலுங்கு ரீமேக் படத்தில் எமி ஜாக்சன் கேரக்டரில் நடிகை கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil theri


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தெறி’. இந்தப் படத்தில் நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.

தற்போது ‘தெறி’ தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. விஜய் நடித்த கேரக்டரில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். சமந்தா கேரக்டருக்கு நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், எமி ஜாக்சன் கேரக்டருக்கு நடிகை கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்