ஆப்நகரம்

சிசிஎல் போட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகர் விக்ராந்த்!

நடிகர் விக்ராந்த், சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.

TOI Contributor 24 Dec 2017, 2:44 am
நடிகர் விக்ராந்த், சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil ccl cricket league vikranth will not participated
சிசிஎல் போட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகர் விக்ராந்த்!


கோலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வருபவர் நடிகர் விக்ராந்த். தற்போது இவர் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவை விட கிரிக்கெட்தான் அதிகமாகப் பிடிக்கும். இவர் விளையாட்டைப் பார்க்க அதிக ரசிகர்கள் வருவார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறும். இந்தப் போட்டியில் எப்போதும் ஹீரோவாக காட்சியளிப்பவர் நடிகர் விக்ராந்த்தான். ஆனால், விக்ராந்த் இந்த ஆண்டு போட்டியில் நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம் என கூறியுள்ளார்.

அவர் போட்டியில் கலந்து கொள்ளாத அளவிற்கு அப்படி என்ன நடந்தது. விக்ராந்தை யார் என்ன சொன்னார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். மேலும், அவரின் ஆட்டத்திற்கு தான் பலரும் சிசிஎல் போட்டி பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்