ஆப்நகரம்

Shraddha Srinath: தல அஜித்திற்கு இப்படியொரு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

தல அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்த சினிமா பிரபலம் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நடந்துள்ளது.

Samayam Tamil 10 Aug 2019, 8:40 pm
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள மாஸ் படம் நேர்கொண்ட பார்வை. எந்த வித பிரச்சனையும் இல்லாமல், அறிவிப்புக்கு முன்னதாக வந்த அஜித்தின் படம் இது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் மாஸ் ஹிட் கொடுத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். அதிகாலை 1 மணி முதல் நேர்கொண்ட பார்வை படம் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
Samayam Tamil 2L6A2275


Also Read: H Vinoth: மாஸ் காட்டிய மங்காத்தா தல: டுவிட்டரில் தாறுமாறா தெறிக்கும் நேர்கொண்ட பார்வை!

ஏற்கனவே பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்புகாட்சி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனமே கிடைத்தது. இந்த நிலையில், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்து சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதில், இப்படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். ஆனால், படத்தில் மீரா கிருஷ்ணனாக வரும் அவர் பட காட்சிகளைக் கண்டு கண்ணீர்விட்டு அழுதுள்ளார் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Thala Statue: நேர்கொண்ட பார்வை மெகா கொண்டாட்டம்: அஜித்துக்கு சிலை வைத்து அசத்திய ரசிகர்கள்!

இதே போன்று நடிகை வரலட்சுமி, நேர்கொண்ட பார்வை இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படம். இப்படத்தை தேர்வு செய்து நடித்த அஜித்திற்கு வாழ்த்துக்கள். அனைவரும் இப்படத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு படத்தில் உள்ளது போன்று மாற்றம் வரும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நோ மீன்ஸ் நோ…இது போன்ற ஒரு படத்தை கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றார்.



நேர்கொண்ட பார்வை விமர்சனம்: நோ மீன்ஸ் நோ என்று வசனத்தை தெறிக்கவிட்டு ராக்ஸ்டாரான தல!










அடுத்த செய்தி

டிரெண்டிங்