ஆப்நகரம்

Dhanush: அவரு மாமனாரு இல்லை...எப்பவுமே தலைவரு தான்: தனுஷ்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மரண மாஸ் காட்டி வருகிறது.

Samayam Tamil 10 Jan 2019, 12:53 pm

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மரண மாஸ் காட்டி வருகிறது.
Samayam Tamil dhnhu


இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

Also Read This: Rajini Petta: திரும்ப வந்த தலைவர்: பேட்ட மரண மாஸ் கொண்டாட்டம்: டுவிட்டரில் ரசிகர்கள் ரஜினிபைடு!

இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டிரைலர் முதல் மாஸ் மரணம் வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
திரும்ப வந்த தலைவர் - பேட்ட மரண மாஸ் கொண்டாட்டம்
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள பேட்ட படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் என்று பலரும் திரையரங்கிற்கு சென்று ரஜினியின் பேட்ட மரண மாஸை கண்டு ரசிகர்களோடு ரசிகர்களாக ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் பேட்ட படம் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் கசிய வாய்ப்புள்ளதா?
இதனைப் போன்று விஸ்வாசம் படத்தை தல 59 படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சங்கம் திரையரங்கிற்கு சென்று நேரில் கண்டு ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்