ஆப்நகரம்

பிரபலங்களின் வாழ்த்து மழையில் விஜய்யின் ’சர்கார்’

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Jun 2018, 6:42 pm
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.
Samayam Tamil vijay-sarkar-cover-pic
'சர்கார்’-க்கு பிரபலங்கள் வாழ்த்து


விஜய் நடிக்கும் 62வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

’கத்தி’ மற்றும் ’துப்பாக்கி’ படங்களுக்கு மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இந்த படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி இன்று விஜய் 62 படத்தின் பெயர் ’சர்கார்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சர்கார் பட அறிவிப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் அறிவிக்கப்பட்ட நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது. இப்படத்திற்கான பிரபலங்களும், சர்கார் படக்குழுவினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.









அடுத்த செய்தி

டிரெண்டிங்