ஆப்நகரம்

எஸ்.பி.பி.யின் உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி: வைரல் வீடியோ

எஸ்.பி.பி.யின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Samayam Tamil 25 Sep 2020, 5:02 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 74. இத்தனை ஆண்டுகளாக மக்களுக்காக பாடியது போதும் என்று இறைவன் அவரை தனக்காக பாட அழைத்துக் கொண்டதாக சிவகுமார் கூறியுள்ளார்.
Samayam Tamil udhayanidhi stalin


மருத்துவமனையில் இருந்து எஸ்.பி.பி.யின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

எஸ்.பி.பி.யின் உடல் வருவதற்கு முன்பே சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் தீனா, தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஆகியோர் அவரின் வீட்டிற்கு சென்று காத்திருந்தார்கள். இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
எஸ்.பி.பி.யை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடும் ஆவலில் ரசிகர்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். மாஸ்க் அணிந்தபடி பலரும் அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது.

எஸ்.பி.பி.யின் கடைசி வீடியோ: அவர் பிசியோ செய்வதை பார்த்து ரசிகர்கள் கண்ணீர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்