ஆப்நகரம்

யாரும் பார்க்க முடியாத இடத்தில் கணவர் பெயரை டாட்டூ குத்திய சமந்தா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 28 Apr 2021, 8:28 am
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil celebs fans wish samantha a very happy birthday
யாரும் பார்க்க முடியாத இடத்தில் கணவர் பெயரை டாட்டூ குத்திய சமந்தா


சமந்தா

ஏ மாய சேசாவே படம் மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார். ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவரின் கெரியர் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சமந்தா உடம்பில் இருக்கும் டாட்டூக்கள் பற்றியும் பேச்சு கிளம்பியுள்ளது. சமந்தா தன் காதல் கணவர் நாக சைதன்யா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். இதையடுத்து ரகசிய இடத்தில் சைய் என்று பச்சை குத்தினார். பல நாட்கள் ரகசியமாக வைத்திருந்த அந்த டாட்டூவை ஒரு நாள் அனைவருக்கும் காட்டிவிட்டார்.

காதல்

சமந்தாவின் ரகசிய டாட்டூவை பார்த்தவர்களோ, அந்த இடத்தில் டாட்டூ போடும்போது ரொம்ப வலித்திருக்குமே, கணவர் மீது அவ்வளவு அன்பா என்றார்கள். அதன் பிறகு அடிக்கடி அந்த ரகசிய டாட்டூவை காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அதிலும் பிங்க் நிற சேலை அணிந்து சைய் டாட்டூவை காட்டியபடி அவர் புகைப்படங்களுக்கு கொடுத்த போஸ் ரசிகர்களை கவர்ந்தது.

முதல் படம்

தன் முதல் படமான ஏ மாய சேசாவே நினைவாக முதுகு பகுதியில் YMC என்று டாட்டூ குத்தினார் சமந்தா. ஏ மாய சேசாவே படத்தில் நடித்தபோதே நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டதாம். பல ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டதாக சமந்தா தெரிவித்தார். YMC தவிர்த்து கணவனும், மனைவியும் வைகிங் சிம்பளை டாட்டூ குத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்து எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்