ஆப்நகரம்

செக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் படம் வருகிற செப்டம்பா் 28ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 11:26 am
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் படம் வருகிற செப்டம்பா் 28ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Chekka Seventha Vanam


காற்று வெளியிடை படத்தை தொடா்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். வழக்கமாக ஒரு தமிழ் சினிமா மீதான எதிா்பாா்ப்பை காட்டிலும் இப்படத்திற்கு சற்று வழுவான எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றாக நடிக்கின்றனா்.

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனா். மேலும் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூா் அலிகான், தியாகராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இடம் பெற்றுள்ளனா்.


ரசிகா்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பா் 28ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்