ஆப்நகரம்

சொத்துவாி செலுத்தாத நடிகா் ராம்கீக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வாி செலுத்தாத நடிகா் ராம்கீன் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2018, 5:38 pm
கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வாி செலுத்தாத நடிகா் ராம்கீன் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil chennai corporation sent notice to actor ramki
சொத்துவாி செலுத்தாத நடிகா் ராம்கீக்கு மாநகராட்சி நோட்டீஸ்


1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவா் நடிகா் ராம்கீ. குறிப்பிட்ட காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்தவா். இவா் நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் இவா் வசித்து வரும் வீட்டிற்கு கடந்த 13 ஆண்டுகளாக சொத்துவாி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வாியை செலுத்தக்கோாி சென்னை மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகா் ராம்கீ சொத்து வாியை கட்டவில்லையாம்.

இதனைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சி ராம்கீயின் வீட்டிற்கு இன்று இறுதி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் தற்போது வரை பாக்க வைத்துள்ள ரூ.1.17 லட்சம் சொத்து வாியை வருகிற 7 நாட்களில் செலுத்த வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாி மற்றும் சொத்து வாியை ஆண்டு கணக்கில் பாக்கி வைத்துள்ள நபா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி ஏற்கனவே எச்சாித்திருந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்