ஆப்நகரம்

அஜித் நடிப்பில் வந்த 17 படங்களின் பாடல்களை ஒளிபரப்ப சோனிக்கு நீதிமன்றம் தடை!

வில்லன், வாலி உள்ளிட்ட தல அஜித்தின் நடிப்பில் வந்த 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாவில் ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 7 May 2019, 3:09 pm
வில்லன், வாலி உள்ளிட்ட தல அஜித்தின் நடிப்பில் வந்த 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாவில் ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil ajith


பேஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாவில் ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், அஜித் நடித்துள்ள சில படங்களின் ஆடியோ உரிமையை அதன் தயாரிப்பாளரிடம் இருந்து நாங்கள் வாங்கி வைத்துள்ளோம். ஆனால், அதனை சோனி மியூசிக் நிறுவனம் யூடியூப், திங் மியூசிக் போன்றவற்றில் பதிவிட்டுள்ளது. இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே சோனி மியூசிக் நிறுவனம் அந்தப் பாடல்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கவேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த 17 படங்களின் பாடல்களை ஒளிப்பரப்ப சோனி மியூசிக் நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்