ஆப்நகரம்

Sarkar Collections: மீண்டும் மாட்டிக் கொண்ட சர்கார் : வசூல் விவரத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்கார் படத்தின் வசூல் விவரத்தை முழுமையாக அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2018, 12:39 pm
சர்கார் படம் முதலில் புகைப்பிடிக்கும் காட்சியுடன் கூடிய முதல்பார்வை போஸ்டர் வெளியான போதிலிருந்தே பிரச்னை தொடங்கியது.
Samayam Tamil sarkar


தன் பின்னர் கதை திருட்டு புகார் எழுந்தது. இதனால் படம் வெளியாவதற்கு முன் இரு வாரங்களாக, படத்தை வெளியிட தடை உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்தது. அதைத் தொடர்ந்து சர்கார் படம் வெளியாகும் போது அதிக டிக்கெட் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் சர்கார் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூலில் புதிய சாதனைகளையும் படைத்து வருகின்றது.

வசூல் எவ்வளவு?
சர்கார் திரைப்படம் தீபாவளி திருநாளான நவம்பர் 6ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான போது நீதிமன்ற உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டார் போல அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக (ரூ.500 முதல் 1,500) பலர் புகார் தெரிவித்தனர்.

நவம்பர் 6 முதல் 16ம் தேதி வரையிலான சர்கார் திரைப்படத்தின் மதுரையின் வசூல் விவரத்தை முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்ப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அடேங்கப்பா, பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா? மெர்சல் சாதனையை முறியடித்த ‘சர்கார்’!

அதில், “மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?,
நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.” என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்