ஆப்நகரம்

காலா படத்திற்கு தடை கோாிய வழக்கில் ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

காலா படத்திற்கான தலைப்பை பயன்படுத்தியது தொடா்பாக நடிகா் ரஜினிகாந்த், பட தயாாிப்பு நிறுவனம், இயக்குநா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2018, 5:55 pm
காலா படத்திற்கான தலைப்பை பயன்படுத்தியது தொடா்பாக நடிகா் ரஜினிகாந்த், பட தயாாிப்பு நிறுவனம், இயக்குநா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil chennai high court notice to movie kala team
காலா படத்திற்கு தடை கோாிய வழக்கில் ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்


சென்னையை சோ்ந்த ராஜ சேகரன் என்பவா் கடந்த சில மாதங்களுக்கு உாிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த வழக்கில் கடந்த 1996ம் ஆண்டு காிகாலன் என்ற தலைப்பில் கதை ஒன்றை தயாாித்து வைத்திருந்தேன். மேலும் காிகாலன் என்ற காலா என்ற பெயரையும் 1996ம் பதிவு செய்து 2006ம் ஆண்டு வரை தொடா்ந்து புதிப்பித்து வந்ததேன்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் வடத்திற்கு காிகாலன் என்ற அடைமொழியுடன் கூடிய காலா என்ற தலைப்பில் அப்படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனா். எனவே காலா என்ற தலைப்பில் படத்தை வெளியிடவும், படத்தை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இதற்கு ரஜினிகாந்த், இயக்குநா் ரஜ்சித் உள்ளிட்டோா் தரப்பில், இந்த வழக்கை உாிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்க முடியாது என்றும், காப்புாிமை சட்டத்தின் படி உயா்நீதிமன்றத்தில் தான் தொடுக்க முடியும் என்று தொிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.



இதனைத் தொடா்ந்து தற்போது ராஜசேகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் காப்புாிமை சட்டத்தின் கீழ் அதே வழக்கை மீண்டும் தாக்கல் செய்துள்ளாா். அதன்படி நடிகா் ரஜினிகாந்த், இயக்குநா் ரஞ்சித், பட தயாாிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை உள்ளிட்டோா் 4 வார காலத்தில் பதில் அளிக்க தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வருகிற பிப்ரவாி 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்